உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைவியை தாக்கிய கணவர் தற்கொலை 

மனைவியை தாக்கிய கணவர் தற்கொலை 

புதுச்சேரி : மனைவியை அடித்து விட்டு மன உளைச்சலில் இருந்த கணவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.லாஸ்பேட்டை குறிஞ்சி நகரை சேர்ந்தவர் லட்சுமணன், 60. இவர் நேற்று முன்தினம் ஏற்பட்ட குடும்ப பிரச்னையில் மனைவியை தாக்கினார். இதனால், கோபித்து கொண்டு, இவரது மனைவி விஜயா, அவரது மூத்த மகள் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த லட்சுமணன், நேற்று வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை