உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சட்டசபை வளாகத்தில் போராட்டம் நடத்துவேன்: கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ஆவேசம்

சட்டசபை வளாகத்தில் போராட்டம் நடத்துவேன்: கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ஆவேசம்

புதுச்சேரி : கோவிலுக்கு சொந்தமான இடத்தில் மது, சூதாடுவதை தடுக்காவிட்டால் சட்டசபை வளாகத்தில் போராட்டம் நடத்துவேன் என கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பேசினார்.கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் அவர் பேசியதாவது:கருவடிக்குப்பம் கருமுத்து மாரியம்மன் கோவில் சொத்து சமூக விரோதிகளின் கூடாராமாக பயன்படுத்தப்படுகிறது. கோவில் வளாகத்தில் மது குடிக்கின்றனர். சூதாட்டம் நடக்கின்றது. இது தொடர்பாக, லாஸ்பேட்டைகாவல் நிலையத்திலும் இந்து சமய அறநிலையத் துறையிலும் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.இந்து சமய அறநிலைய துறை ஆணையரிடம் ஆதாரத்துடன் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கமாட்டேன் என வெளிப்படையாக கூறுகிறார். சில அதிகாரிகள் எதை கூறினாலும் முதல்வர் பெயரை சொல்லி தப்பித்து கொள்கின்றனர். இதனால் முதல்வருக்கு தான் கெட்ட பெயர் ஏற்படுகிறது. ஆணையரை பதவி நீக்க வேண்டும். கோவிலுக்கு சொந்தமான இடத்தில் மது குடிப்பதையும், சூதாடுவதையும் தடுத்து நிறுத்தா விட்டால் சட்டசபை வளாகத்தில் போராட்டம் நடத்துவேன். கடலரிப்பால் காலாப்பட்டு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 300 கோடி தர தயாராக உள்ளது. இதற்காக மாநில அரசு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டும். மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு பிரதமரை முதல்வர் ரங்கசாமி சந்தித்து அதிக நிதியை பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை