உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கம்பன் விழா துவக்கம்: கவர்னர், முதல்வர் பங்கேற்பு

கம்பன் விழா துவக்கம்: கவர்னர், முதல்வர் பங்கேற்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் மூன்று நாட்களுக்கு நடக்கும், கம்பன் விழா துவக்க நிகழ்ச்சியில் கவர்னர் ராதாகிருஷ்ணன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்றனர். புதுச்சேரி கம்பன் கலையரங்கில், 57ம் ஆண்டு கம்பன் விழா நேற்று துவங்கியது. முதல் நாளான, 'திருநாள் மங்கலம்' நிகழ்ச்சியில் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ராம சுப்ரமணியன் தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமி வரவேற்றார். கவர்னர் ராதாகிருஷ்ணன் துவக்க உரையாற்றினார். இதில், கம்பன் கழகத்தின், கம்ப ராமாயணம் நுால் வெளியிடப்பட்டது. கவர்னர் ராதாகிருஷ்ணன் நுாலை வெளியிட்ட முதல் பிரதியை, முதல்வர் ரங்கசாமி பெற்றுக்கொண்டார். இதையடுத்து, காலை 11:30 மணிக்கு, பாரதி கிருஷ்ணகுமாரின் எழிலுரையும், மாலை 5:00 மணிக்கு, ராமலிங்கத்தின் தனியுரையும் நடந்தது.மாலை 6:30 மணிக்கு சுமதியின் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த விழாவில், சபாநாயகர் செல்வம், கம்பன் கழக தலைவர் செல்வகணபதி எம்.பி.,செயலாளர் சிவக்கொழுந்து, அமைச்சர் சாய்சரவண்குமார், அனிபால்கென்னடி எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இன்று காலை 9:00 மணிக்கு, வீர பாலாஜியின் இளையோர் அரங்கமும், காலை 10:45 மணிக்கு, ஜெயராஜின் வழக்காடு மன்றமும் நடக்க உள்ளது. மாலை 5:00 மணிக்கு, சுந்தரத்தின் கவியரங்கமும், மாலை 6:00 மணிக்கு இளம்பிறை மணிமாறனின், பட்டிமன்றமும் நடக்க உள்ளது. விழா, நாளை நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை