முறைசாரா தொழில் பயிற்சி அறிமுக அமர்வு
புதுச்சேரி : பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் முறை சாரா தொழில் பயிற்சிக்கான அறிமுக அமர்வு நிகழ்ச்சி நடந்தது.பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில், வேலை வாய்ப்பு பிரிவு, மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் பிரிவு சார்பில் தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் சேவை மையத்தின்முறைசாரா தொழில் பயிற்சி அறிமுக அமர்வு நடந்தது.கல்லுாரி முதல்வர் வீரமோகன் தலைமை தாங்கினார். மாற்றுத் திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் பிரிவு நோடல் அதிகாரி அகிலாண்டேஸ்வரி வரவேற்றார். வேலை வாய்ப்பு அதிகாரி சந்திரா தொகுத்து வழங்கினார்.மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய சேவை மையத்தின் தொழில் பயிற்சியாளர் டாக்டர் ஜானகிராமன், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான முறைசாரா தொழிற்கல்வி பயிற்சி, வேலை வாய்ப்பு ஆதரவு, பல்வேறு வகையான நிதியுதவிகள் மற்றும் பிற சேவைகள் குறித்து விளக்கி பேசினார்.வேலை வாய்ப்பு அதிகாரி வரலட்சுமி நன்றி கூறினார்.