| ADDED : ஆக 11, 2024 05:02 AM
புதுச்சேரி : விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பு மூலம் கூறிய தொகையை வங்கியில் செலுத்த வேண்டும் என அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., வலியுறுத்தினார்.புதுச்சேரி சட்டசபை பூஜ்ஜிய நேரத்தில் அவர் பேசியதாவது;புதுச்சேரி அரசு விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்து அரசாணை வெளியிடவில்லை. அந்த குறிப்பிட்ட தொகையை கூட்டுறவு வங்கிகளுக்கு செலுத்ததால், புதுச்சேரி விவசாயிகள் கூட்டுறவு சங்கம், கூட்டுறவு வங்கியில் விவசாய பயிர்கடன் வாங்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.ரூ. 12 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அரசாணை வெளியிடாததால், கடந்த 10 ஆண்டுகளாக விவசா மக்கள் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். சட்டசபையில் பல முறை கூறியும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிதியாண்டில் விவசாய கடன் தள்ளுபடி தொகையை சங்கங்கள், வங்கிகளுக்கு செலுத்தி விவசாய மக்கள் பயிர் கடன் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.