உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உலக தாய்மொழி நாள் விழா

உலக தாய்மொழி நாள் விழா

திருபுவனை: திருவாண்டார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக தாய்மொழி நாள் விழா கொண்டாடப்பட்டது.பள்ளி துணை முதல்வர் சந்திரன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் மங்கலம் முன்னிலை வகித்தார். ஆசிரியர் சந்திரசேகரன் வரவேற்றார். புதுச்சேரி விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி விரிவுரையாளர் சிவராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தமிழ் மொழிப்பற்று, தமிழ் உணர்வு மற்றும் தமிழர் பண்பாடு குறித்தும், சிறப்புரையாற்றினார்.முனைவர் மோகன்ராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தருமன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் லிங்கேஸ்வரன், லட்சுமி, ஜெயந்தி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை