உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மக்கள் குறைகளுக்கு தீர்வு காண வாட்ஸ் ஆப் எண் அறிமுகம்

மக்கள் குறைகளுக்கு தீர்வு காண வாட்ஸ் ஆப் எண் அறிமுகம்

புதுச்சேரி: நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி மக்களின் குறைகளுக்கு தீர்வு காண, சந்திர பிரியங்கா எம்.எல்.ஏ., 'வாட்ஸ் ஆப்' எண்ணை அறிமுகப்படுத்தி உள்ளார்.நெடுங்காடு, கோட்டுச்சேரி தொகுதி எம்.எல்.ஏ., சந்திர பிரியங்கா, நேற்று முன்தினம் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி, அவர் பொதுமக்களின் குறைகளை தீர்க்க பிரத்தியேகமான, வாட்ஸ் ஆப் எண் - 9080171575 அறிமுகப்படுத்தினார்.இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை, அவருக்கு தெரியப்படுத்தலாம். சாலை வசதி, குடிநீர் வசதி, மின் விளக்கு, மக்கள் நலம் சார்ந்த தங்கள் பிரச்னைகளை புகைப்படமாக, இந்த எண்ணிற்கு அனுப்பலாம். இதன் வழியாக பிரச்னைக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படும் என, சந்திர பிரியங்கா எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் என்.ஆர்.காங்., கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ