வானுார்: ஆரோவில் கிராம செயல்வழிக்குழு, வரும் அக்டோபர் 6ம் தேதி ஏற்பாடு செய்துள்ள மாரத்தான் ஓட்டத்திற்கு முன்பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் கிராம செயல்வழிக்குழு மற்றும் ஏ.பி.எஸ்.சி.ஏ., இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாரத்தான் ஓட்டம், வரும் அக்., 6ம் தேதி நடக்கிறது. ஆண்கள், பெண்களுக்கு 10 கி.மீ., 4 கி.மீ., என நடத்தப்படும் மாரத்தான் ஓட்டத்தில், 15 வயது முதல் 30 வயதுக்கு மேல் உள்ள ஆண்கள், பெண்கள், 10 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களும் பங்கேற்கலாம்.காலை 6:00 மணிக்கு துவங்கும் 10 கி.மீ., ஓட்டம், பொம்மையார்பாளையம் சமுதாய நலக்கூடத்தில் இருந்து இரும்பை கோவில் வரையும், 7:00 மணிக்கு துவங்கும் 4 கி.மீ., ஓட்டம், இடையஞ்சாவடி விளையாட்டு மைதானத்தில் இருந்து இரும்பை மாகாளேஸ்வர் கோவில் வரை சென்றடைய வேண்டும். 10 கி.மீ., ஓட்டத்திற்கு முதல் பரிசாக 8,500 ரூபாய், இரண்டாம் பரிசாக 6,500 ரூபாய், மூன்றாம் பரிசாக 4,000 ரூபாய், ஆறுதல் பரிசாக 10 பேருக்கு தலா 1,250 ரூபாய் வழங்கப்படுகிறது.4 கி.மீ., ஓட்டத்திற்கு முதல் பரிசாக 4,000 ரூபாய், இரண்டாம் பரிசாக 2,750 ரூபாய், மூன்றாம் பரிசாக 1,500 ரூபாய் ஆறுதல் பரிசாக 10 பேருக்கு கலா 750 ரூபாய் வழங்கப்படுகிறது.பத்து கி.மீ., ஓட்டத்தில் பங்கேற்க விரும்புவோர், பதிவுக்கட்டணமாக 200 ரூபாயும், 4 கி.மீ.,க்கு 100 ரூபாயும் செலுத்தி, 9894785535, 9943255280, 9751531715 ஆகிய மொபைல் எண்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பதிவு செய்ய கடைசி நாள், வரும் 31ம் தேதி ஆகும். இத்தகவலை ஆரோவில் கிராம செயல்வழிக்குழு திட்ட இயக்குனர் ஜெரால்டு மோரீஸ் தெரிவித்துள்ளார்.