மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
16 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
16 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
16 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
16 hour(s) ago
புதுச்சேரி: தேசிய கூடோ போட்டியில் பங்கேற்ற புதுச்சேரி வீரர்கள் ரயிலில் தரையில் அமர்ந்து வந்ததாக புகார் எழுந்துள்ளது.தேசிய அளவிலான கூடோ தற்காப்பு கலை போட்டி இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த 25ம் தேதி துவங்கியது. இதில் பங்கேற்ற புதுச்சேரி வீரர்கள் நீலவேணி, 16; மணிவண்ணன், 26, ஆகியோர் பயிற்சியாளர் பாலசந்தருடன் வீடு திரும்ப தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சிலிப்பர் கோச்சில் ஏறினர். அனைவரும் இருக்கை இல்லாததால், தரையில் அமர்ந்து பயணித்தனர். இது தொடர்பாக பயிற்சியாளர் பாலசந்தர், வீடியோ மூலம் தென்னக ரயில்வேயிடம் புகார் தெரிவித்துள்ளார்.வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:சென்னையில் இருந்து டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் உறுதி செய்யப்பட்டது. ஆனால், திரும்ப வரும்போது டிக்கெட் உறுதி செய்யப்படவில்லை. வேறு வழியின்றி தரையில் அமர்ந்து பயணிக்கிறோம்.வழியில் ஒவ்வொரு ஊரிலும் நுாறு பேர் ஏறி இறங்குகின்றனர். பெரும்பாலோரிடம் டிக்கெட்டே இல்லை. அவர்கள் ரயிலில் இருக்கையில் அமர்ந்தும் படுத்தும் வருகின்றனர். ஆனால் டிக்கெட் எடுத்தும் அன்ரிசர்வில் எங்களை பயணிக்க நிர்பந்திக்கின்றனர்.இணையத்தில் டிக்கெட் இருப்பதாக எங்களுக்கு காட்டுகிறது. ஆனால் சோதனைக்கு வரும் ரயில் ஊழியர்கள் டிக்கெட் இல்லை என கூறுவதால், தரையிலேயே நெருக்கடியில் பயணித்து வருகின்றோம். சில நிமிடங்கள் உறுதி செய்தால் விளையாட்டு வீரர்களை அலைகழிக்காமல் சிலிப்பர் கோச்சில் பயணிக்க செய்யலாம். ஆனால் டிக்கெட் பரிசோதகர்கள் விளையாட்டு வீரர்களுக்கு உதவ மறுக்கின்றனர். விளையாட்டு வீரர்கள் இந்த நெருக்கடியை சந்தித்து வீடு திரும்புகிறோம்.இதேபோன்று நிலை தொடர்ந்து நீடித்தால், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வீரர்களுக்கு தயக்கம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார். அவர்கள், இன்று (31ம் தேதி) காலை 6:00 மணிக்கு சென்னை வந்தடைகின்றனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago