மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
6 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
6 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
6 hour(s) ago
புதுச்சேரி: இலவச அரிசி வழங்கும் திட்டத்தில் முழு மற்றும் இடிசல் அரிசிவழங்க வேண்டும் என ஜான்குமார் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்தார்.கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அவர் பேசியதாவது:புதுச்சேரியில் சிறப்பான வளர்ச்சி உள்ளது. கொம்பாக்கம் வீரன்கோவில் குளம், லாஸ்பேட்டை பிள்ளையார்குளம், ஆயி குளம் புனரமைக்கப்பட்டுள்ளது. இதுபோல் மீதமுள்ள 84 ஏரிகள், 650 குளங்களில் உள்ளஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வாரி ஆழப்படுத்த வேண்டும். குளங்களில் அளவுக்கு அதிகமாக சேரும் தண்ணீரை போர்வேல் அமைத்து பூமிக்கு அடியில் அனுப்பினால் தான் நிலத்தடி நீர் மட்டம் உயரும். புதுச்சேரியில் உள்ள 76 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில், 70 டேங்க்குகள் மூலம் தினசரி 1 கோடி லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த தண்ணீர் பூமியில் இருந்து எடுக்கப்பட்டால், அந்த இடம் வெற்றிடமாக மாறுவதால் கடல் நீர் உட்புகுகிறது. எனவே, குளங்களில் தேக்கும் தண்ணீர் நிலத்தடியில் உருவாகும் வெற்றிடத்தை நிரப்பும். கடல் உட்புகுவதை தடுக்கவேண்டும். ரேஷன் கடை திறந்து இலவச அரிசி வழங்குவதாக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மக்கள் முழு அரிசியும், இடிசல் அரிசியும் அதிக அளவில் சாப்பிடுகின்றனர். எனவே,10 கிலோமுழு அரிசியும், 10 கிலோஇடிசல் அரிசி வழங்கினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கூறினார்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago