உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜிப்மர் ஊழியர் தற்கொலை 

ஜிப்மர் ஊழியர் தற்கொலை 

புதுச்சேரி : புதுச்சேரி, மூலக்குளம் போஸ் நகரை சேர்ந்தவர் லுாக்காஸ் கார்பே, 51; ஜிப்மர் ஊழியர். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், 2 மகள்கள் உள்ளனர். லுாக்காஸ் கார்பே, தனது மகள் திருமணத்திற்கு வாங்கிய கடன் காரணமாக, கடந்த சில தினங்களாக மன வேதனையில் இருந்து வந்துள்ளார். மேலும், ஜிப்மருக்கு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை