உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி கவர்னராக கைலாஷ்நாதன் பதவியேற்பு ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்

புதுச்சேரி கவர்னராக கைலாஷ்நாதன் பதவியேற்பு ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்

புதுச்சேரி : புதுச்சேரி கவர்னராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி கைலாஷ்நாதன் நேற்று பதவியேற்றார். புதுச்சேரியில் கவர்னராக இருந்த கிரண்பேடி நீக்கத்திற்கு பிறகு கடந்த 2021ம் ஆண்டு பிப்., 18ம் தேதி் தெலுங்கானா கவர்னர் தமிழிசை புதுச்சேரியின் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார். மூன்றாண்டு பதவி வகித்த அவர், லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவியை ராஜினாமா செய்தார்.அதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 20ம் தேதி புதுச்சேரி பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்ட ஜார்கண்ட் மாநில கவர்னர் ராதாகிருஷ்ணன், கடந்த 27ம் தேதி மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். புதுச்சேரி கவர்னராக கேரளாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி கைலாஷ்நாதனை ஜனாதிபதி முர்மு நியமித்தார்.புதிய கவர்னர் பதவியேற்பு விழா கவர்னர் மாளிகையில் நேற்று காலை 11:20 மணிக்கு துவங்கியது. தலைமை செயலர் சரத் சவுக்கான், புதிய கவர்னர் நியமிக்கப்பட்டதற்கான ஜனாதிபதி உத்தரவை வாசித்தார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொ) கிருஷ்ணகுமார், கவர்னர் கைலாஷ்நாதனுக்கு பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து அவர் போலீசாரின் வரவேற்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.கவர்னர் கைலாஷ்நாதனுக்கு, முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், திருமுருகன், சாய் சரவணன்குமார், எதிர்க்கட்சி தலைவர் சிவா, துணை சபாநாயகர் ராஜவேலு, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம், ஆறுமுகம், ரமேஷ், லட்சுமிகாந்தன், பாஸ்கர், சந்திரபிரியங்கா, கல்யாணசுந்தரம், வெங்கடேசன், ராமலிங்கம், அசோக்பாபு, அங்காளன், நேரு, பி.ஆர்.சிவா, பிரகாஷ்குமார், சீனிவாசஅசோக், சம்பத், அனிபால் கென்னடி, செந்தில்குமார், நாகதியாகராஜன், வைத்தியநாதன், ரமேஷ்பரம்பத், அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன், இந்திய கம்யூ., செயலாளர் சலீம், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு செயலாளர் ஓம்சக்திசேகர் மற்றும் அரசு செயலர்கள், துறை இயக்குநர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

முதல் கையெழுத்து;

கவர்னர் கைலாஷ்நாதன், முதல் கையெழுத்தாக முதியோர், விதவைகள், முதிர்கன்னிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய உதவித்தொகை வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். இதன் மூலம் ஜூலை மாதத்திற்கான ரூ. 43.30 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான தொகை 1,81,616 பயனாளிகள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி