உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கார்கில் வெற்றி விழா

கார்கில் வெற்றி விழா

புதுச்சேரி : மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் கார்கில் வெற்றி விழா நடந்தது.மதகடிப்பட்டு, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் கார்கில் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன், கல்லுாரி முதல்வர் வெங்கடாஜலபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.கல்லுாரி வேலைவாய்ப்பு துறை டீன் கைலாசம், கார்கில் பற்றிய அறிமுக உரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக, சுபேதார் மேஜர் பரமசிவம் பங்கேற்றார். பரமசிவம் தனது பணி அனுபவம், கார்கில் போர், ஆபரேஷன் விஜய் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கினார். மேலும், ராணுவம், கடற்படை, வான்படை போன்ற முப்படைகளில், பல்வேறு வேலைவாய்ப்புகள் உள்ளதை கூறினார். மாணவர்கள் தங்கள் வாழ்வில், வெற்றி அடைய குறிக்கோளுடன் படிக்க வேண்டும், தோல்வியை கண்டு துவளாமல் மீண்டும் முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி அடையலாம் என பேசினார். கல்லுாரி ஆராய்ச்சி துறை டீன் வேல்முருகன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை, ஆங்கில பேராசிரியர் ஜெய்சித்ரா மேற்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை