உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறுநீரக தின விழிப்புணர்வு

சிறுநீரக தின விழிப்புணர்வு

வில்லியனுார், : உலக சிறுநீரக தினத்தையொட்டி, உறுவையாறு ஆச்சார்யா சம்பூர்ண வித்யாலயா பள்ளியில் வெங்கடேஸ்வரா பாராமெடிக்கல் கல்லுாரி டயாலிசிஸ் பிரிவு சார்பில், உலக சிறுநீரக நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.முகாமிற்கு தலைமை ஆசிரியர் காயத்ரி தலைமை தாங்கினார். வெங்கடேஸ்வரா பாராமெடிக்கல் கல்லுாரி முதல்வர் ஆனந்தவைரவேல் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு சிறப்புரையாற்றினார். டயாலிசிஸ் துறை பேராசிரியர் சவுமியா, சிறுநீரக நோயின் காரணங்கள், அறிகுறிகள், மற்றும் சிறுநீரக நோய் பாதுகாப்பு குறித்து பேசினார்.தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு சிறுநீரக நோய் பாதுகாப்பு குறித்து பாரா மெடிக்கல் கல்லுாரி மாணவர்களின் குறும்படம் திரையிடப்பட்டது. நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி