கோடையில் இதய நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவை கே.எம்.ஹார்ட் பவுண்டேஷன் ஆலோசனை
புதுச்சேரி: கே.எம். ஹார்ட் பவுண்டேஷன் நிர்வாகம், கோடைக்காலத்தில் இதய நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவை குறித்து ஆலோசனை வழங்கியுள்ளது.அதில், கோடை காலத்தில் அதிக வெப்ப நிலையால், உடல் பல மாற்றங்களை சந்திக்கிறது. குறிப்பாக இதயம் அதிகபட்சமாக வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். உடலில் நீர்சத்து குறைந்து ரத்த அழுத்தம் குறையக்கூடும். இதனால் மயக்கம், தளர்ச்சி ஏற்படும்.வெப்பம் உடல் சூட்டை அதிகரிக்கிறது. இதயதுக்கு அதிக வேகத்தில் ரத்தம் இயக்க வேண்டிய கட்டாயத்தால் இதயதுடிப்பு அதிகரிக்கலாம்.உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும் போது, ரத்தம் அடர்த்தியாகும். இதனால் ரத்தம் விறைப்பு தன்மை கொண்டு இதயம் மற்றும் ரத்த குழாய்களும் அதிக அழுத்தம் ஏற்படுத்தி நோயாளிகளுக்கு அபாயத்தை உண்டாக்கும்.கோடை வெப்பம் மிகவும் அதிகரிக்கும் போது, உடலின் இயற்கையான குளிர்ச்சி முறை செயல் மாறுகிறது. எனவே, தினமும் குறைந்த பட்சம் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும், வெயிலுக்கு நேரடியாக அதிக நேரம் செல்லாமல், தினமும் இரண்டு முறை குளிப்பதால் உடலை குளிர்விக்கலாம். அதிக காரமாண உணவுகளை தவிர்த்து, பழங்கள், காய்கறிகள், அதிக நீர்ச்சத்து உணவுகளை சாப்பிட வேண்டும்.அதிக வெப்பத்தில் கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் வேலைகளை தவிர்ப்பது நல்லது.மது அருந்துவது உடலின் வெப்பத்தை கட்டுப்படுத்துவதை கடினமாக்குகிறது. மேலும் இது உடல் நீரிழிப்புக்கும் காரணமாகிவிடும்.இதய பிரச்னை உள்ளவர்கள் கோடை வெப்ப காலத்தில் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம், இதய செயலிழப்பு உள்ளவர்கள் திரவங்கள் குறைவாகவே குடிக்கிறார்கள். வெப்பகாலத்தில் அதிக நீர் உட்கொள்ளுதல், எவ்வாறு சரிசெய்வது பற்றி மருத்துவரிடம் அறிந்து கொள்வது அவசியம். மேலும் விபரங்களுக்கு புதுச்சேரி நெல்லித்தோப்பு புவன்கரே வீதியில் உள்ள கே.எம்.ஹர்ட் பவுண்டேஷனை தொடர்பு கொள்ளலாம். 63811 56914, 0413-2242410 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கே.எம். ஹார்ட் பவுண்டேஷன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.