உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கூலி தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை

கூலி தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை

பாகூர்: கூலி தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பாகூர் அடுத்த மணமேடு எம்.ஏ.எஸ். நகரை சேர்ந்தவர் இடும்பன், 42; கூலி தொழிலாளி.இவரது மனைவி கம்சலா, 37. கடந்த சில நாட்களாக இடும்பன் சரியாக வேலைக்கு செல்வதில்லை. கடந்த 24ம் தேதி வீட்டில் இருந்த இடும்பன் மது குடிக்க பணம் கேட்டு கம்சலாவிடம் தகராறு செய்தார். அவர் பணம் இல்லை என கூறி, வெளியே சென்று விட்டார்.சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, இடும்பன் மின் விசிறியில் துாக்கில் தொங்கினார்.அக்கம்பக்கத்தினர்உதவியுடன் அவரை மீட்டு, பாகூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி