உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லத்தி விளையாட்டு போட்டி: புதுச்சேரி அணிக்கு 2ம் இடம்

லத்தி விளையாட்டு போட்டி: புதுச்சேரி அணிக்கு 2ம் இடம்

புதுச்சேரி: தேசிய அளவிலான லத்தி விளையாட்டு போட்டியில் 72 பதக்கங்களுடன் இரண்டாம் இடம் பிடித்த புதுச்சேரி அணியை முதல்வர் பாராட்டினார்.தேசிய அளவிலான லத்தி விளையாட்டு போட்டி சத்தீஷ்கர் மாநிலத்தில் அண்மையில் நடந்தது. இதில் 10க்கும் மேற்பட்ட மாநில மாணவர்கள் கலந்து கொண்டனர். புதுச்சேரியில் இருந்து 38 வீரர்கள் கலந்து கொண்டனர்.இதில் தங்கம்-32, வெள்ளி-19, வெண்கலம்-21 என மொத்தம் 72 பதக்கங்களை அள்ளிய புதுச்சேரி அணி இரண்டாம் இடத்தை பிடித்தது. புதுச்சேரி அணி சார்பாக பங்கேற்ற 38 மாணவர்களும் பதக்கங்களை வென்றனர்.அவர்களை முதல்வர் ரங்கசாமி, அரசு கொறடா ஆறுமுகம் பாராட்டினர். புதுச்சேரி லத்தி விளையாட்டு சங்க தலைவர் சுந்தரராஜன், செயலாளர் ரகுமான், நடுவர்கள் முகமது இம்தியாஸ், முகம்ம இஜாஸ், தரண்யா உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ