மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
18 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
18 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
18 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
18 hour(s) ago
அரியாங்குப்பம்: மாநில அளவில் நடந்த பெத்தாங் விளையாட்டு போட்டியில் அரியாங்குப்பம் லியோ கிளப் வீரர்கள் முதல் பரிசு பெற்றனர்.புதுச்சேரி மாநிலத்தில், நியூ பெத்தாங் அசோசியேஷன் புதுச்சேரி கீழ், 40 கிளப் செயல்பட்டு வருகிறது. இந்த கிளப் மூலம், இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை பெத்தாங் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.அரியாங்குப்பம் அடுத்த மணவெளி பகுதியில், லியோ கிளப் உள்ளது. இந்த கிளப் கடந்த 2011ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த கிளப்பில், 40க்கும் மேற்பட்ட, 18க்கும் மேல் வயதுடைய பள்ளி, கல்லுாரி மாணவர்களும், விளையாட்டு வீரர்களும் உறுப்பினர்களாக சேர்ந்து பெத்தாங் விளையாட்டில், பயிற்சி பெற்று வருகின்றனர். பெத்தாங் போட்டியில் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கடந்த வாரம், அரசு ஜீவானந்தம் பள்ளியில் மாநில அளவிலான பெத்தாங் போட்டி மூன்று நாட்கள் நடந்தது. அங்கு நடந்த போட்டியில், புதுச்சேரி உட்பட தமிழகத்தில் இருந்து 40 கிளப்பில் மூலம் 622 வீரர்கள் கலந்து கொண்டனர். அதில், அரியாங்குப்பம் லியோ கிளப் அணியை சேர்ந்த வீரர்கள் போட்டியில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தனர்.மாநிலத்தின் நியூ பெத்தாங் அசோசியேஷன் மற்றும் அரியாங்குப்பம் லியோ கிளப் கவுரவ தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான பாஸ்கர், சாதனை படைத்த லியோ கிளப் வீரர்களை வாழ்த்தினர்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago