உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தமிழகத்திற்கு கடத்த முயன்ற மதுபாட்டில்கள் பறிமுதல்

தமிழகத்திற்கு கடத்த முயன்ற மதுபாட்டில்கள் பறிமுதல்

பாகூர் : தமிழக பகுதிக்கு கடத்த முயன்ற மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள், மது பாட்டில்களை வழங்குவதை தடுக்கும் வகையில், போலீசார் மற்றும் பறக்கும் படைகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.அந்த வகையில், கிருமாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையிலான போலீசார் நேற்று இரவு முள்ளோடை எல்லை பகுதியில் ரோந்து சென்றனர். அவ்வழியாக வந்த வாலிபர் போலீசாரை கண்டதும், அவர் வைத்திருந்த பையை கீழே போட்டு விட்டு தப்பி சென்றார். போலீசார் அந்தப் பையை சோதனை செய்த போது அதில் 90 மில்லி அளவுள்ள 59 பாட்டில்கள், 180 மில்லி அளவு கொண்ட 5 பாட்டில்கள் என, மொத்தம் 6 லிட்டர் அளவுள்ள மதுபானங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, கலால் துறையிடம் ஒப்படைத்து, மது கடத்தலில் ஈடுபட்டு தப்பியோடிய மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ