உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லாரி டிரைவர் தற்கொலை

லாரி டிரைவர் தற்கொலை

காரைக்கால் : காரைக்காலில் விஷம் குடித்த லாரி டிரைவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.காரைக்கால் கோட்டுச்சேரி, வரிச்சிக்குடி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சங்கர் கணேஷ், 48; லாரி டிரைவர். இவரது மனைவி கவிதா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சங்கர் கணேஷ், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனால் மனமுடைந்த அவர், கடந்த 24ம் தேதி விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடன், அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி