மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
5 hour(s) ago
புதுச்சேரி: மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் உள்ள மணக்குள வித்யா விநாயகர் கோவில் கும்பாபி ேஷகம் நேற்று அதிகாலை 5 மணிக்கு யகா சாலை பூஜைகளுடன் துவங்கியது.தொடர்ந்து காலை 10.30 மணிக்கு தக் ஷஷீலா பல்கலைக்கழக மேலாண் இயக்குனர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், குழும உறுப்பினர்கள், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி இயக்குனர் வெங்கடாசலபதி, மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் முன்னிலையில் மகா கும்பாபிேஷகம் நடந்தது.விழாவை கோவில் ஸ்தபதி அறிவழகன்,அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தி,சிவாச்சாரியார் ஈஸ்வரசிவம் ஆகியோர் நடத்திவைத்தனர்.மதகடிக்கப்பட்டு,கலிதீர்த்தாள்குப்பம் ஊர்பிரமுகர்கள்,பல்வேறு பகுதிகளைசேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் தேர்வு கட்டுப்பாட்டாளர்,கல்லுாரி அனைத்து துறை டீன்கள், துறைத் தலைவர்கள், போராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.மேலும் மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, மயிலம் பொறியியல் கல்லுாரி, மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி இயக்குனர்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி நிர்வாகம் சார்பில் செய்திருந்தனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago