உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தற்காப்பு கலை பயிற்சி முகாம்

தற்காப்பு கலை பயிற்சி முகாம்

பாகூர், : மணப்பட்டு அரசு நடுநிலை பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி முகாம் துவக்க விழா நடந்தது.புதுச்சேரி கல்வித்துறை மூலமாக அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில், தற்காப்பு கலை பயிற்சி முகாம் துவக்க விழா நடந்தது.விழாவிற்கு, தலைமை ஆசிரியர் அறிவரதன் தலைமை தாங்கினார். புதுச்சேரி மாநில கராத்தே சங்க பொதுச் செயலாளர் கராத்தே வளவன், இணை செயலாளர் பாலச்சந்தர் வாழ்த்தி பேசினர். பட்டதாரி ஆசிரியர்கள் விவேகானந்தன், கலைச்செல்வி, ஏகதேவி ஆகியோர் நோக்கவுரையாற்றினர். பாகூர் அமிர்தலிங்கம் கருந்துரையாற்றினார்.பயிற்சியாளர்கள் ஜான்சி ராணி, தமிழரசி ஆகியோர் 6ம் முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு செயல்முறை பயிற்சி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி