உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழாவில் தியாகிகளின் வாரிசுகளுக்கு கவுரவம்

சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழாவில் தியாகிகளின் வாரிசுகளுக்கு கவுரவம்

வில்லியனுார்: கீழுரில் 'சட்டப்பூர்வ பரிமாற்ற நாள்' விழாவில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளை சாபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் கவுரவபடுத்தினர்.பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்த புதுச்சேரியை, இந்தியாவுடன் இணைப்பதற்கு, மாநில மக்கள் பிரதிநிதிகள் 178 பேரிடம் கருத்து வாக்கெடுப்பு கீழூர் கிராமத்தில் நடத்தது. இதில், இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவாக 170 பேரும், எதிராக 8 பேரும் வாக்களித்தனர்.அதையடுத்து, பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் 1962ம் ஆண்டு ஆக., 16ம் தேதி புதுச்சேரி, இந்தியாவுடன் இணைக்க ஒப்புதல் அளித்து சட்ட அங்கீகாரம் வழங்கியது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு நடந்த கீழூரில், நினைவுத் துாண், நினைவு மண்டபம் அமைத்துள்ளனர்.ஆண்டுதோறும் அக., 16ம் தேதி 'சட்டப்பூர்வ பரிமாற்ற நாள்' என, கீழுர் நினைவிடத்தில் அரசு சார்பில் விழா நடந்து வருகிறது.அதன்படி, நேற்று நடந்த விழாவில் சபாநாயகர் செல்வம், வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய்சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம் ஆகியோர் பங்கேற்று போலீஸ் மரியாதையை ஏற்றுக் கொண்டனர். தியாகிகள் நினைவு துாண்களுக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். விழாவில் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழாவில் வாக்கெடுப்பில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளை சாபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் கவுரவ படுத்தினர்.அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தேசியக் கொடி ஏற்றி வைத்து பேசினார். விழாவில் தலைமைச் செயலர் சரத் சவுகான், கலெக்டர் குலோத்துங்கன், ஐ.ஜி., அஜித் குமார் சிங்லா, சப் கலெக்டர் சோமசேகர் அப்பாராவ் கொட்டாரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ