உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு மருத்துவமனையில் மருத்துவ கருத்தரங்கு

அரசு மருத்துவமனையில் மருத்துவ கருத்தரங்கு

புதுச்சேரி : கதிர்காமம் இந்திரகாந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு நிறுவனம் சார்பில் மருத்துவர்களுக்கான மருத்துவ கருத்தரங்கு நடந்தது.மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சென்னை அப்போலோ கேன்சர் மையத்தின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ரிஷிகேஷ் சர்கார் பங்கேற்று, மூளைக்கட்டிக்கான எளிய மற்றும் நவீன முறை சிகிச்சை குறித்து விளக்கம் அளித்தார்.கருத்தரங்கு நிகழ்ச்சியில், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஷமிமுனிஸா பேகம், மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன், குறை தீர்ப்பு அதிகாரி ரவி உட்பட மருத்துவ நிபுணர்கள், மருத்துவ அதிகாரிகள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை