உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உயர்கல்வி கட்டண குழுவின் கூட்டம்

உயர்கல்வி கட்டண குழுவின் கூட்டம்

புதுச்சேரி : லாஸ்பேட்டை உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில், உயர்கல்வி கட்டண நிர்ணயக் குழுவின் கூட்டம் நடந்தது.புதுச்சேரி மாநில உயர்கல்வி கட்டணக்குழு தலைவரும், ஐகோர்ட் முன்னாள் நீதிபதியுமான கந்தம்மாள் தலைமை தாங்கினார். கல்வித்துறை செயலாளர் மோரோ, உயர்கல்வித் துறை இயக்குநர் அமன் சர்மா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மாணவர் பெற்றோர் நலச் சங்க தலைவர் பாலசுப்ரமணியம், சென்டாக் மாணவர் பெற்றோர் சங்க தலைவர் நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, கல்விக் கட்டணங்களை உயர்த்தக் கூடாது என ஆட்சேபனை தெரிவித்தனர். கட்டணக்குழு தலைவரிடம் மனுக்களையும் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி