மேலும் செய்திகள்
அரியாங்குப்பத்தில் பா.ஜ., காலண்டர் வழங்கல்
9 hour(s) ago
ஐகோர்ட் நீதிபதி முதல்வருடன் சந்திப்பு
9 hour(s) ago
புதிய அங்கன்வாடி அமைக்க பூமி பூஜை
10 hour(s) ago
காகிதக்கூழ் கைவினைப் பயிற்சி
10 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை முன்னேர துவங்கி அதிகமாக மழை பெய்யும் என வானிலையாளர் கருத்து தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் கடந்த ஆண்டை விட கடும் வெப்பம் நிலவி வருகின்றது.நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்தும் வருகிறது.வெப்பம் அதிகரிப்பால் தென்மேற்கு பருவமழை முன்னரே துவங்கி, அதிக மழை பொழிவுக்கு வாய்ப்பிருப்பதாக வானிலையாளர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து வானிலையாளர் பாலமுருகன் கூறியதாவது:பூமியில் வெப்பம் சீராக இல்லாமல் காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துவதை எல்.நினோ என்கி றோம். இதன் காரணமாக அதிதி மழை, அதிதி வெப்ப நிலை அதிகரிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாகவே சராசரியை காட்டிலும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதற்கு எதிரானது லா.நினோ. இது நல்ல மழையை தரும்.எல்.நினோவில் இருந்து லா.நினோவுக்கு மாற துவங்கியுள்ளதால், முன்னதாகவே தென்மேற்கு பருவமழை துவங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் நல்ல மழை பெய்யும், அதற்கு அறிகுறியாக தற்போது பல இடங்களில் மழை பெய்ய துவங்கியுள்ளது. மே 19ம் தேதி அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை துவங்குவதற்காக சாத்தியம் உருவாகி, மே இறுதி அல்லது ஜூன் துவக்கத்தில் கேரளா பகுதியில் நிலை கொள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது.எனவே இந்தாண்டு தென்மேற்கு பருவமழை கூடுதலாக பெய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
9 hour(s) ago
9 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago