உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் முதல்வரிடம் வாழ்த்து

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் முதல்வரிடம் வாழ்த்து

புதுச்சேரி: சிவராந்தகம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியிடம் வாழ்த்து பெற்றனர்.மங்கலம் தொகுதிக்குட்பட்ட சிவராந்தகத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது.இந்த சங்கத்தில் புதிய நிர்வாகிகள் தேர்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இதில், சங்கத்தின் புதிய தலைவர் இளம்பருதி, துணை தலைவர் தனலட்சுமி, இயக்குனர்கள் சந்திரசேகர், ராம், பஞ்சாட்சரம், நாகராஜன், விஜய் ஆனந்த், சரத்குமார், ராஜலட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் முன்னிலையில், முதல்வர் ரங்கசாமியை சட்டசபையில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி