உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மில் தொழிலாளர்கள்  கவர்னரிடம் மனு  

மில் தொழிலாளர்கள்  கவர்னரிடம் மனு  

புதுச்சேரி: புதுச்சேரி மில் தொழிலா ளர்கள், கவர்னர் ராதாகிருஷ்ணனை சந்தித்து நிலுவைத் தொகைகளை வழங்க மனு அளித்தனர்.புதுச்சேரியில், அசோக்பாபு எம்.எல்.ஏ., தலைமை யில், சுதேசி, பாரதி மற்றும் ரோடியர் மில்லை சார்ந்த தொழிலாளர்கள், கவர்னர் ராதாகிருஷ்ணனை நேற்று சந்தித்தனர். அப்போது கவர்னரிடம், தங்களுக்கு சேர வேண்டிய சம்பள பாக்கி, கிராஜு வெட்டி, பி.எப்., மற்றும் போனஸ் உள்ளிட்ட நிலுவைத் தொகைகளை வழங்க கோரி மனு அளித்தனர்.மனுவை பெற்றுக்கொண்ட கவர்னர், கோரிக்கைகள் குறித்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, உறுதி அளித்தார். சுதேசி பாரதி மில்லை சேர்ந்த கணேசன், விஜயகுமார், பழனிவேல், ரோடியார் மில்லை சேர்ந்த முத்தமிழ், பாலா, கணேசன் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி