உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 1 லட்சம் மரக்கன்று நடும் பணி அமைச்சர் துவக்கி வைப்பு

1 லட்சம் மரக்கன்று நடும் பணி அமைச்சர் துவக்கி வைப்பு

வில்லியனுார் : மோடி பாரஸ்ட் திட்டத்தின் கீழ் ஊசுடு தொகுதியில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியை அமைச்சர் சாய்சரவணன்குமார் துவக்கி வைத்தார்.பியூச்சர் இந்தியா அறக்கட்டளை சார்பில், மோடி பாரஸ்ட் திட்டத்தின் கீழ், ஊசுடேரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மரக்கன்று நடும் விழா துவங்கி உள்ளனர். முதல் நாள் துவக்க விழா கோனேரிக்குப்பம் கிராமத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர் சாய்சரவணன்குமார் மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பியூச்சர் இந்தியா அறக்கட்டளை நிர்வாகிகள் மூர்த்தி, ராஜாமனோகர், சுபலட்சுமி, குமரன், கிளாரன்ஸ், ரமேஷ், அய்யனார், மல்லிகா உட்பட பலர் கலந்துகொண்டனர்.மோடி பாராஸ்ட் திட்டத்திற்கு ஏரோ கிரேன் டெக்னாலஜிஸ், ஜேபி அலுமினியம், கிரீன் வாரியர், வள்ளலார் ஏஜென்சி, அமேஸ்மெண்ட் புட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் சார்பில், 1 லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்குகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி