உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அரசு பள்ளிக்கு அமைச்சர் பாராட்டு

10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அரசு பள்ளிக்கு அமைச்சர் பாராட்டு

புதுச்சேரி: பிள்ளையார்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகம், சீருடைவழங்கப்பட்டது.வில்லியனூர் அடுத்த பிள்ளையார்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. மாணவி ஜீவிதா 500க்கு 477 மதிப்பெண்களுடன் பள்ளியில் முதல் இடம் பிடித்தார். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியர் ராபர்ட் கென்னடி தலைமை தாங்கினார். அமைச்சர் சாய்சரவணன் குமார், 100 சதவீத தேர்ச்சிக்கு காரணமான ஆசிரியர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினார். மாணவர்களுக்கு அரசின் இலவச பாடபுத்தகங்கள், சீருடைகள் வழங்கினார். விழாவில், அவர், பேசுகையில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி அதிகரித்துள்ளது. மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். மாணவர்களின் அயராத உழைப்பும், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்களின் வழிகாட்டுதலே இதற்கு முக்கிய காரணம். வரும் கல்வி ஆண்டிலும் இதே போல் அதிக மதிப்பெண்கள்களுடன் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும்' என்றார்.பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை கோமதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ