உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெட்ரோல் பங்குகளில் நுாதன திருட்டு

பெட்ரோல் பங்குகளில் நுாதன திருட்டு

புதுச்சேரியில் 14 லட்சத்திற்கும் அதிமான வாகனங்கள் உள்ளது. இவற்றிற்கு பெட்ரோல், டீசல் நிரப்ப மாநிலம் பாரத், இந்துஸ்தான் (எச்.பி.,) இந்தியன் பெட்ரோலிய நிறுவனங்களின் 35க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் இயங்கி வருகின்றன.இவற்றில் நாள் தோறும் லட்சக்கணக்கான மக்கள் எரிபொருள் நிரப்புகின்றனர். சில பெட்ரோல் பங்குகள் எரிபொருள் நிரம்பும் போது நுாதன முறையில் பெட்ரோல், டீசல் திருட்டில் ஈடுப்பட்டு வருகின்றன.பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் விநியோகிக்கும் மிஷினில், மாநில எடையளவு துறையினர் ஆண்டிற்கு ஒரு முறை சோதனை செய்து அதற்கு சீல் வைக்கின்றனர். அதன்பிறகு அதில் எந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை கவனிப்பது கிடையாது. இதனை பயன்படுத்தி கொள்ளும் சில பெட்ரோல் பங்குகளில், மிஷினில் ரிப்பேர் என எடையளவு துறையினர் வைக்கும் சீலை உடைத்து அதில் பாய்ண்ட் மாற்றி அமைத்து திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு பங்கிலும் 10 பெட்ரோல் விநியோகிக்கும் மிஷின் இருந்தாலும், அதில் ஒரு குழாய் (கன்) மட்டும் மாற்றம் செய்து திருட்டில் ஈடுபடுகின்றனர். அத்தகைய குழாய் மூலம் பெட்ரோல், டீசல் நிரப்பும்போது ஒரு லிட்டருக்கு 100 முதல் 200 மி.லி., வரை பெட்ரோல் திருடப்படுகிறது.அரசு மற்றும் அரசு துறை சார்ந்த நிறுவனங்கள் நடத்தும் பங்குகளில் இந்த முறைகேடுகள் அதிக அளவில் நடந்து வருகிறது. காரணம், இத்தகைய பெட்ரோல் பங்குகளில் எடையளவு துறையினரும், பெட்ரோலிய நிறுவனத்தினரும் எவ்வித சோதனையும் மேற்கொள்வது இல்லை. இதனை பயன்படுத்தி பெட்ரோல், டீசல் திருட்டு சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகிறது.சமீபத்தில் காமராஜர் சாலையில் உள்ள அரசு பெட்ரோல் பங்கில் ரூ. 50க்கு பெட்ரோல் நிரப்பிய கூலி தொழிலாளி, பங்கில் இருந்து 200 மீட்டர் துாரம் சென்றதும் பைக் நின்றது. அடுத்த சில நிமிடத்தில் பெட்ரோல் பங்கில் நடந்த சோதனையில் பைக்கில் 200 மி.லி., மட்டுமே டேங்கில் இருந்தது. விசாரித்தபோது, மீதி பெட்ரோல் எஞ்சின் குடித்து விட்டதாக பங்க் ஊழியர்கள் பதில் அளித்துள்ளனர்.எனவே, புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பெட்ரோல் பங்குகளில் உள்ள அனைத்து பெட்ரோல் விநியோகிக்கும் மிஷின்களையும் பெட்ரோலிய நிறுவனங்கள் அடிக்கடி ஆய்வு செய்து எடை அளவை உறுதி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி