உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

புதுச்சேரி: புதுச்சேரி கொக்கு பார்க் மற்றும் காமராஜ் சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.புதுச்சேரியில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் மதிய வேளையில் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.நேற்று பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஆனால், மாலை நேரத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதன் காரணமாக அதிக அளவில் பொதுமக்கள் தங்களது வாகனங்களில் வெளியே வந்ததால், புதுச்சேரியில் முக்கிய சாலைகள் மற்றும் சிக்னல்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.குறிப்பாக, புதுச்சேரி கொக்கு பார்க் சிக்னல் மற்றும் காமராஜ் சாலை ராஜா தியேட்டர் சிக்னல், ராஜீவ்காந்தி சிக்னல் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ