உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி மேலும் வளர்ச்சியடைய நமச்சிவாயம் வெற்றி பெற வேண்டும்: ரங்கசாமி

புதுச்சேரி மேலும் வளர்ச்சியடைய நமச்சிவாயம் வெற்றி பெற வேண்டும்: ரங்கசாமி

புதுச்சேரி,: 'புதுச்சேரி மாநிலம் நல்ல வளர்ச்சியை அடைவதற்கு, பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை வெற்றி பெற செய்ய வேண்டும்' என முதல்வர் ரங்கசாமி பேசினார்.புதுச்சேரி லோக்சபா தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:நம்முடைய அரசு முதியோர்களுக்கு உதவித்தொகை, மாணவர்களுக்கு இலவச சைக்கிள் மற்றும் லேப்டாப் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.புதுச்சேரியில் இந்த திட்டங்கள் மேலும் அதிகரிக்க வேண்டும். நம் மாநிலம் நல்ல வளர்ச்சியை காண வேண்டும்.இளைஞர்களுக்கு நிறையவேலைவாய்ப்புகளைஉருவாக்கி கொடுக்க வேண்டும். அதற்கு மத்திய அரசின் உதவியும், நிதியும் வேண்டும்.மத்தியில் மீண்டும் ஆளப்போவது தே.ஜ., கூட்டணி அரசு தான். அப்படியிருக்கையில், இங்கு ஆளும் நம்முடைய அரசுக்கு, மத்திய அரசு உதவியாக இருக்கும்.நம் கூட்டணியில் இருந்து வேட்பாளர் நமச்சிவாயம் எம்.பி.,யாகி செல்லும்போது மாநில வளர்ச்சிக்கு இன்னும் உறுதுணையாக இருக்கும். அதற்கு நீங்கள், தாமரை சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும் என பேசினார். பிரசாரத்தின் போது முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் ஆனந்து உடனிருந்தார்.

உற்சாக வரவேற்பு

தட்டாஞ்சாவடி தொகுதியில் நேற்று வீதி வீதியாக சென்று முதல்வர் ரங்கசாமி பிரசாரம் செய்தார். அப்போது, வீடுகள்தோறும் காத்திருந்த பொதுமக்கள் முதல்வருக்கு பொன்னாடை அணிவித்தும், மாலை அணிவித்தும் வரவேற்றனர்.பல இடங்களில் முதல்வர் ரங்கசாமி, வேட்பாளர் நமச்சிவாயம், முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் ஆனந்து ஆகியோர் மீது மலர் துாவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ