மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
18 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
18 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
18 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
18 hour(s) ago
புதுச்சேரி : புதுச்சேரி தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் பங்கேற்ற சிறப்பு கூட்டம், கிருஷ்ணா நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது.சங்கத்தின் மாநில தலைவர் பாட்சா தலைமை தாங்கினார். அகில இந்திய ஆசிரியர் அமைப்பான ஏ.பி.ஆர்.எஸ்.எம்., சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷிவானந்த் சின்டின்கேரா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 2023-24ம் ஆண்டுக்கான சங்கத்தின் செயல்பாடுகள் குறித்த மலரை வெளியிட்டார்.கூட்டத்தில் ஷிவானந்த் சின்டின்கேரா பேசும்போது, 'புதுச்சேரி அரசு ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். புதிதாக ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.காரைக்காலில் பணியாற்றும் 50 வயதுக்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகளின் நலனை கருத்தில் கொண்டு, வரும் ஜூன் மாதத்தில் புதுச்சேரிக்கு இடமாறுதல் வழங்க வேண்டும்' என்றார்.கூட்டத்தில், சங்கத்தின் மாநில பொதுக்குழுவை வரும் ஜூலை 21ம் தேதியன்று கூட்டுவது, ஒப்பந்த அடிப்படையில் உள்ள விரிவுரையாளர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், பாலசேவிகாக்களை பணிநிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் சங்கத்தின் மாநில செயலாளர் சுந்தரமூர்த்தி, மகளிர் அணி செயலாளர் தாட்சயிணி(எ)அனுஷா, இணைச் செயலாளர் செந்தமிழ்செல்வன், புதுச்சேரி மாவட்ட தலைவர் விஜயா மற்றும் கிருபாகரன், சந்துரு, சங்கீதா, தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago