உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நவதுர்கா பள்ளி நுாறு சதவீதம் தேர்ச்சி

நவதுர்கா பள்ளி நுாறு சதவீதம் தேர்ச்சி

நெட்டப்பாக்கம்: திருவாண்டார்கோவில் ஸ்ரீ நவதுர்கா ஆங்கில மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. பள்ளியில் தேர்வு எழுதியவர்கள் 70, தேர்ச்சி பெற்றவர்கள் 70 தேர்ச்சி சதவீதம் நுாறு ஆகும். பள்ளியளவில் மாணவர் உதயபிரியன் 584 மதிப்பெண் பெற்று முதலிடமும், மாணவி அன்பரசி 581 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், மாணவர் திருமுருகராஜன் 565 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளனர். 550 மதிப்பெண்களுக்கு மேல் 3 பேர், 500க்கு மேல் 13 பேர், 450க்கு மேல் 34 பேர் மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.மாணவர் உதயபிரியன் இயற்பியல், பயாலாஜி பாடத்திலும், மாணவர் லாட்டுபிஸ்வால் கம்ப்யூட்டர் அப்பிளிகேஷன் பாடத்திலும், மாணவர் நவின் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திலும் 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பள்ளி கல்வி குழு தலைவர் சத்யா நடராஜன், பள்ளி துணை முதல்வர் விவேக் நடராஜன் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். கல்விக்குழு தலைவர் சத்யா நடராஜன் கூறுகையில், பள்ளியில் தொடர் வெற்றிக்கு பாடுப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியைகள், பெற்றோர்கள், அலுவலக ஊழியர்கள், மாணவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ