உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இரும்பு திருடிய செக்யூரிட்டிக்கு வலை

இரும்பு திருடிய செக்யூரிட்டிக்கு வலை

திருபுவனை: புதுச்சேரி, திருபுவனை அடுத்த திருவாண்டார்கோவிலில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சமீப காலமாக இரும்பு பொருட்கள் திருடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா ஆய்வு செய்யப்பட்டது. அதில் அங்கு செக்யூரிட்டியாக வேலை செய்து வரும் அரியூர் விமலன் என்பவர் தொழிற்சாலையில் இரும்பு பொருட்களை திருடி சாக்கு மூட்டையில் கட்டி, பைக்கில் கொண்டு செல்வது பதிவாகி இருந்தது. பலமுறை அவர் இரும்பு பொருட்கள் திருடியது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 2 லட்சம்.புகாரின்பேரில் திருபுவனை இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, விமலனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ