உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நியூ மாடர்ன் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி சாதனை

நியூ மாடர்ன் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி சாதனை

புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டை நியூ மாடர்ன் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.பள்ளியளவில் மாணவி கார்த்திகாதேவி 487 மதிப்பெண்கள் பெற்று முதலிடம், மாணவி தீபிகா 478 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம், மாணவர் நரேஷ்குமார் 469 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றனர்.90 மதிப்பெண்களுக்கு மேல் தமிழ் பாடத்தில் 14 பேரும், ஆங்கலத்தில் 21 பேரும், கணிதத்தில் 10 பேரும், அறிவியல் பாடத்தில் 10 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 15 பேரும் எடுத்துள்ளனர். பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் கஸ்துாரி கிரிஷ்குமார் பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர். வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி