உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராம் தங்க நகை மாளிகையில் தங்கம் வாங்க புதிய திட்டம்

ராம் தங்க நகை மாளிகையில் தங்கம் வாங்க புதிய திட்டம்

புதுச்சேரி : புதுச்சேரி ராம் தங்க நகை மாளிகையில், சுலபமான முறையில் தங்கம் வாங்க புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசு தங்கத்தின் மீதான வரியை குறைத்ததால், தங்கத்தின் விலை கடந்த சில நாட்களில் கிடுகிடுவென குறைந்து வருகிறது. இதனால் தங்கம் வாங்கி சேமிக்க பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.ஆனால் போதிய பணம் இல்லாததால், பலரும் நகை வாங்குவதை தள்ளி போடுகின்றனர். காலம் கடத்துவதால் ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. அதனால் தங்கம் விலை குறைவான நேரத்தில் திருமணம், வளைகாப்பு, காதணி உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்கி சேமிக்க மிகவும் சுலபமான புதிய திட்டத்தை நேரு வீதி, ராம் தங்க நகை மாளிகை அறிமுகம் செய்துள்ளது.இத்திட்டத்தில், வாடிக்கையாளர் வாங்க நினைக்கும் நகையின் மொத்த மதிப்பில் பாதி தொகையை மட்டும் நகை கடையில் செலுத்தி நகையை சொந்தமாக்கி கொள்ளலாம்.நகைக்கான மீதி தொகைக்கு வங்கி உதவியுடன் சில நிமிடத்தில் கடன் உதவி பெற நகை கடையே சிறப்பு ஏற்பாடு செய்து கொடுக்கிறது. இத்திட்டம் முதல் முறையாக புதுச்சேரியில் ராம் தங்க நகை மாளிகை அறிமுகம் செய்துள்ளது. இதில் மறைமுக கட்டணங்கள் ஏதும் வசூலிப்பது கிடையாது.நகை கடை நிர்வாகம் கூறுகையில், 'இத்திட்டம் மூலம் வாங்கப்படும் நகை கடன் தொகை முடிந்து நகையை வாடிக்கையாளர் பெறும்போது, மார்க்கெட்டில் தங்கத்தின் விலை உயர்ந்து இருக்கும். மேலும் வாடிக்கையாளர் விரும்பிய டிசைன் நகையும் கையில் இருக்கும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு லாபம்' என்றனர். ஈசியாக நகை வாங்குவது தொடர்பாக மேலும் விபரங்களுக்கு 0413-2260300 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ