உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நிழல் இல்லா நாள் நிகழ்ச்சி: மாணவர்கள் பங்கேற்பு

நிழல் இல்லா நாள் நிகழ்ச்சி: மாணவர்கள் பங்கேற்பு

புதுச்சேரி: நோணாங்குப்பத்தில் நடந்த நிழல் இல்லா நாள் நிகழ்ச்சியில் மாணவர்கள் கைகோர்த்து பங்கேற்றனர்.புதுச்சேரியில் நேற்று மதியம் 12:04 மணி முதல் 12:14 மணி வரை, சூரியன் செங்குத்தாக இருந்தது. அப்போது அனைத்துப் பொருள்களின் நிழலின் நீளம் பூஜ்ஜியமானது.இந்நிலையில், நோனாங்குப்பம் பகுதி உதவிக் கரங்கள் மாணவர்கள் இல்லத்தில், நிழலில்லா நாள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 180 மாணவர்கள் அந்த அரிய வானியல் நிகழ்வில் பங்கேற்று, கைகளைக் கோர்த்து நின்றனர். நேற்று அவர்களின் நிழல் பூஜ்ய அளவில் இருந்ததைக் கண்டு வியந்தனர். மேலும் பல்வேறு பொருட்கள் கண்ணாடி மீது வைத்து பூஜ்ய நிழல் இருந்ததற்கான, அறிவியல் விளக்கத்தை, முனைவர் அருண் நாகலிங்கம், மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். பொருள்களின் நிழலின் நீளங்களை உற்று நோக்குவது என்பது சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது என, மாணவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ