உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிக்னல் கட்டடங்கள் மீதுள்ள விளம்பர பலகை உறுதிச் சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் உழவர்கரை நகராட்சி அறிவிப்பு 

சிக்னல் கட்டடங்கள் மீதுள்ள விளம்பர பலகை உறுதிச் சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் உழவர்கரை நகராட்சி அறிவிப்பு 

புதுச்சேரி, : உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலை, சிக்னல்களில் கட்டடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள் ஸ்திர தன்மை சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பிரதான சாலைகள் மற்றும் போக்குவரத்து சிக்னலை சுற்றியுள்ள கட்டிடங்கள் மேற்கூரைகளில் பரவலாக விளம்பர பதாகைகள் காணப்படுகிறது. அதே சமயம் பலத்த காற்றின் காரணமாக அந்த பதாகைகள் ஸ்திர தன்மையாக உள்ளனவா என உறுதி செய்யப்பட வேண்டியது அவசியமாகிறது. இல்லையெனில் அவை பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன. விளம்பர பதாகைகள் அமைத்துள்ள கட்டடத்தின் உரிமையாளர்கள் இந்த அறிவிப்பு கண்ட 10 நாட்களில் பதாகைகள் ஸ்திர தன்மையை உறுதி செய்து அது பற்றிய சான்றிதழை அங்கீகரிக்கப்பட்ட பொறியாளர் இடம் பெற்று நகராட்சியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரம் பதாகைகள் வைப்பதை தவிர்க்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. தவறினால் புதுச்சேரி நகராட்சிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அந்த பதாகைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு கட்டடத்தின் உரிமையாளரே பொறுப்பாளர் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ