உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நுால் வெளியீட்டு விழா

நுால் வெளியீட்டு விழா

புதுச்சேரி : முதலியார்பேட்டையில், தமிழ்மணி எழுதிய நுால் வெளியீட்டு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முதலியார்பேட்டை, சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில், தமிழ்மணி எழுதிய, 'வள்ளலாரின் உயிர் இரக்க கோட்பாடு - ஒரு பார்வை' நுால் வெளியீட்டு விழா, ராமலிங்கசாமி கோவில் மடத்தில் நடந்தது.கோதண்டபாணி வரவேற்றார். பேராசிரியர் குழந்தை வேலனார், தலைமை உரையாற்றினார். முத்து நுாலை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். இந்த நுாலின் முதல்பிரதியை, கோபாலகிருஷ்ணன், பெற்றுக்கொண்டார். வேணுகோபாலன் நுால் ஆய்வுரையும் வேல்முருகன், கணேசன், சீத்தாலட்சுமி, பேராசிரியர் கார்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினர். இதையடுத்து நுால் ஆசிரியர் தமிழ்மணி ஏற்புரை வழங்கினார். இளமுருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்