உள்ளூர் செய்திகள்

மூதாட்டி தற்கொலை

புதுச்சேரி, : வயிற்று வலியால் மூதாட்டி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.பாகூர் அடுத்த மதிகிருஷ்ணாபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் கண்ணம்மாள், 75. இவர் கடந்த சில ஆண்டுளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். நேற்று காலை வயிற்று வலி அதிகமானதால் கண்ணம்மாள் வீட்டில் இருந்த லைசாலை எடுத்து குடித்து மயங்கி கிடந்தார். கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்