உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓம் சக்தி டெக்ஸ்டைல்ஸ் இல்லத் திருமண விழா

ஓம் சக்தி டெக்ஸ்டைல்ஸ் இல்லத் திருமண விழா

புதுச்சேரி: புதுச்சேரி ஓம் சக்தி டெக்ஸ்டைல்ஸ் இல்லத் திருமணவிழா சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடந்தது.ஓம் சக்தி டெக்ஸ்டைல்ஸ் சரவணன் - ஜெயலட்சுமி சரவணன் இல்லத் திருமண விழா,முன்னாள் கவுன்சிலரும், புதுச்சேரி அ.தி.மு.க., மாநில இணைச் செயலாளர் கணசேன்தலைமையில் நடந்தது.விழாவில் மணமக்கள் டாக்டர் பிரவின் - ஜனனி ஆகியோரை முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், சாய் சரவணன், துணை சபாநாயகர் ராஜவேலு, முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து, எதிர்க்கட்சி தலைவர் சிவா, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள்., ரமேஷ், கல்யாணசுந்தரம், ஜான்குமார், சம்பத், பிரகாஷ்குமார், ரிச்சர்ட், அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், சாமிநாதன், தட்டாஞ்சாவடி செந்தில்ஆகியோர் வாழ்த்தினர்.ஜவுளி வியாபாரிகள், தொழிலதிபர்கள், நண்பர்கள், உறவினர்கள் மணமக்களை வாழ்த்தினர். முன்னதாக திருமண விழாவிற்கு வருகை தந்தவர்களை சரவணன் - ஜெயலட்சுமி சரவணன், பார்த்திபன் - சாந்தி பார்த்திப்பன், சகோதர்கள் தருண், ராகுல்ஆகியோர் வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ