உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் ஒரே நாளில் 6 நபர்களிடம் ரூ.4 லட்சம் ஆன் லைன் மோசடி

புதுச்சேரியில் ஒரே நாளில் 6 நபர்களிடம் ரூ.4 லட்சம் ஆன் லைன் மோசடி

புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 6 பேரிடம் ரூ. 4 லட்சத்தை சைபர் கிரைம் மோசடி கும்பல் திருடியது போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி வி.எஸ். நகரைச் சேர்ந்தவர் புருேஷாத்தமன், 46; இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் வீட்டிலிருந்து அதிகம் சம்பாதிக்கலாம் என கூறியதை நம்பி, மர்ம நபர் கூறிய டாஸ்க்குகளை முடித்தார். இதில் ரூ. 3.08 லட்சம் செலுத்திய பின்பு, அவரது ஆன் லைன் வர்த்தக போர்ட்டல் முடக்கப்பட்டது.நைனார்மண்டபத்தைச் சேர்ந்த கோகுல் என்ற வாலிபருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் வந்த வீடியோ கால் அட்டன் செய்தார். அப்போது, எதிர் முனையில் நிர்வாணமாக பெண் ஒருவர் தோன்றினார். அடுத்த சில நிமிடத்தில் இணைப்பு துண்டிக்கப்பட்டது.சில நிமிடத்தில் கோகுல் நிர்வாண வீடியோ பார்ப்பதுபோன்று சித்தரித்து, மர்ம கும்பல் பணம் கேட்டு மிரட்டியது. ரூ. 2000 பணம் செலுத்திய பின்பு கோகுல் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.கொம்பாக்கம் குளத்துமேட்டைச் சேர்ந்தவர் ரியாஸ். இவருக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும் என குறுந்தகவல் வந்தது. அதில் இருந்த மொபைல்போன் நம்பரை தொடர்பு கொண்டபோது, முன்பணம் மற்றும் வரி செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். அதை நம்பி ரூ. 50,500 செலுத்திய பின்பு மொபைல் இணைப்பு துண்டிக்கப்பட்டது.இதேபோல், நெட்டபாக்கம் பண்டசோழநல்லுாரைச் சேர்ந்த பெரியாண்டவர் என்பவரிடம் இருந்து ரூ. 10,500 பணம் பறிக்கப்பட்டது. கோரிமேடு ஜிப்மர் குடியிருப்பைச் சேர்ந்த பிரோஜ் ரெயின் என்ற நபரை தொடர்பு கொண்ட மர்ம நபர், உங்களின் ஆதார் மற்றும் மொபைல் நம்பர் பலத்கார வழக்கில் தொடர்பில் இருப்பதாக கூறி ரூ. 4500 பெற்று ஏமாற்றினர். காரைக்கால் கோகுல்ராமன் என்பவரிடம் வாட்ஸ்ஆப் வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றி, அதை ரெக்கார்டு செய்து, கோகுல்ராமனிடம் ரூ. 1000 பறித்தனர். லாஸ்பேட்டையைச் சேர்ந்த பாலகுரு என்பவரை, குறைந்த வட்டிக்கு பணம் கிடைப்பதாக மொபைல் லோன் அப்ளிகேஷன் மூலம் ரூ. 9000 ஏமாற்றினர்.லாஸ்பேட்டை பிரதீப்குமார் என்பவரிடம் ரூ. 3800, சந்தோஷ் என்பவரது வங்கி கணக்கில் இருந்து ரூ. 2000, புதுச்சேரியைச் சேர்ந்த அரவிந்த் என்பரிடம் இருந்து ரூ. 7000 பணத்தை மர்ம கும்பல் மோசடி செய்துள்ளது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை