உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிம்ஸ் மருத்துவமனை சுகாதார மையம் திறப்பு

பிம்ஸ் மருத்துவமனை சுகாதார மையம் திறப்பு

புதுச்சேரி : பிம்ஸ் மருத்துவமனை சுகாதார மையம் கருவடிக்குப்பம் சித்தானந்த சுவாமி கோவில் அருகே, உள்ள ஓம்சக்தி அவென்யூ-வில் நேற்று திறக்கப்பட்டது.சமுதாய மருத்துவத்துறை தலைவர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார். பங்கு தந்தை ஜோபி ஜார்ஜ் சிறப்பு பிரார்த்தனை செய்தார். பிம்ஸ் முதல்வர் அனில் பூர்த்தி சுகாதார மையத்தினை திறந்து வைத்து பேசுகையில், 'இந்த மையத்தில் பொது மருத்துவம், பல் மருத்துவம், பிஸியோதெரபி, மருந்தகம் மற்றும் லேப் வசதிகள் உள்ளன என, தெரிவித்தார். விழாவில் பேராசிரியர் ரேணு, பொதுமேலாளர் ஜார்ஜ் தாமஸ், டாக்டர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை