உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முன் மழலையர் வள மையம் திறப்பு

முன் மழலையர் வள மையம் திறப்பு

திருக்கனுார்: கூனிச்சம்பட்டு பாவேந்தர் பாரதிதாசன் அரசு துவக்கப் பள்ளியில் 'முன் மழலையர் வள மையம்' திறப்பு விழா நடந்தது.ஆசிரியை ரம்யா வரவேற்றார். தலைமை ஆசிரியர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். வட்டம்- 5 பள்ளித் துணை ஆய்வாளர் சொக்கலிங்கம் முன் மழலையர் வள மையத்தை திறந்து வைத்தார்.தேத்தாம்பாக்கம், அரசு தொடக்கப் பள்ளியின் பொறுப்பாசிரியர் குமரன் வாழ்த்தி பேசினார். அசிம் பிரேம்ஜி பவுண்டேஷன் நரேன், சங்கர் ஆகியோர் முன் மழலையர் வள மையத்தின் சிறப்புகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து பெற்றோர்களுக்கு விளக்கினர்.விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் சுரேஷ் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி