உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிப்பு எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிப்பு எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

புதுச்சேரி: மத்திய பட்ஜெட்டில், வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்படாமல் புதுச்சேரி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.முன்னாள் முதல்வர் நாராயணசாமி: விவசாயிகளுடைய, கோரிக்கைகளான, விலை பொருட்களுக்கு இரட்டிப்பு தொகை, விவசாயிகளின் அறுவடையான தானியங்களை சேமிப்பதற்கு உதவித்தொகை, உரத்திற்கு மானியம், விலை பொருள் மானியம் இவைகள் எதுவும் அறிவிக்கப் படவில்லை. மாநில அந்தஸ்து, கடன் தள்ளுபடி, புதிய ரயில்வே திட்டங்கள், நிதி கமிஷனில் இணைப்பு புதுச்சேரிக்கு அறிவிக்கப்படவில்லை. புதுச்சேரி வளர்ச்சிக்கு சிறப்பு திட்டங்கள் இல்லை. அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன்: லோக்சபா தேர்தலில், ஆளும் பா.ஜ., கூட்டணி வேட்பாளரின் தோல்வியை கருத்தில் கொண்டு, புதுச்சேரி மாநிலத்திற்கு எந்த ஒரு திட்டத்திற்கும், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. வரும், 27ம் தேதி பிரதமர் தலைமையில், கூட்டப்பட இருக்கும் திட்டக்குழு கூட்டத்தை முதல்வர் ரங்கசாமி புறக்கணிக்க வேண்டும். இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம்: மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்ய, எந்த அறிவிப்பும் இல்லை. யூனியன் பிரதேசமான புதுச்சேரி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், கட்டமைப்பு துறைகளில் தனியார் ஊக்குவிக்கப்பட்டுள்ளனர்.அ.தி.மு.க., மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன்:தே.ஜ., கூட்டணியில் இடம்பெற்றுள்ள பீகார், ஆந்திரா மாநில முதல்வர்கள் அடிக்கடி பிரதமரையும், மத்திய அமைச்சர்களையும் சந்தித்து, அழுத்தம் கொடுத்து, பல ஆயிரம் கோடி நிதியை பெற்றுள்ளனர். புதுச்சேரி முதல்வரோ, கோரிமேடு தாண்டி செல்வதற்கு கூட அஞ்சுகிறார். புதுச்சேரிக்கு ஒரு திட்டத்தைக்கூட பெற முடியாத முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை