காகிதப் பூ பட்ஜெட் எதிர்க்கட்சித் தலைவர் கருத்து
புதுச்சேரி: புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு உதவாத பட்ஜெட் என பட்ஜெட் குறித்து எதிர்கட்சி தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.அவரது பேட்டி;முதல்வர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் புதிய வருமானம், மத்திய அரசு சிறப்பு நிதி இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரும் தேர்தலை முன்வைத்து அறிவிப்புகள் செய்திருக்கிறார்கள். கடந்த பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் எல்லாம் கிடப்பில் உள்ளது.புதுச்சேரியின் வருவாய், செலவினங்கள், கடன் வாங்க முடியாத நிலை ஆகியவற்றை கணக்கில் கொள்ளாமல் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளனர். அதில் மக்கள் எதிர்பார்த்த திட்டங்கள் ஏதும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. புதிய தொழில் கொள்கை, வணிகர்களுக்கு சலுகைகள், ஐ.டி., பார்க், புதிய சுற்றுலாத் திட்டங்கள் ஏதும் இல்லை. இலவசங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி இருக்கிறார். புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு உதவாத காகிதப் பூ பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார். பேட்டியின்போது, தி.மு.க., எம்.எல்.ஏக்கள், நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.