கோவில் திருப்பணிக்குழு அமைப்பு
புதுச்சேரி: கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோவில் உள்ளிட்ட மூன்று கோவில்களுக்கு கும்பாபிேஷகம் நடத்துவதற்காக திருப்பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.கதிர்காமத்தில் அமைந்துள்ள கதிர்வேல் சுவாமி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கதிர்வேல் சுவாமி கோவில், முத்துமாரியம்மன் கோவில், கெங்கையம்மன் கோவில் ஆகிய கோவில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, கும்பாபிேஷகம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்காக, திருப்பணிக் குழுவை அமைத்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணை வெளியிட்டுள்ளது. திருப்பணிக்குழுவின் தலைவராக முத்தையா, பொருளாளராக தேவஸ்தான நிர்வாகி, உறுப்பினராக கதிர்காமம் தொகுதி எம்.எல்.ஏ., ரமேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.மற்ற உறுப்பினர்களாக மாமல்லன், மாணிக்கசாமி, வைத்தியநாதன், புகழேந்தி, சுகுமாறன், பாலமோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஆணையை திருப்பணிக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு, முதல்வர் ரங்கசாமி நேற்று வழங்கினார். ரமேஷ் எம்.எல்.ஏ., மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.