உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அவர் லேடி ஆப் விக்டரி பள்ளி அறிவியல் கண்காட்சி

அவர் லேடி ஆப் விக்டரி பள்ளி அறிவியல் கண்காட்சி

பாகூர் : பாகூர் அவர் லேடி ஆப் விக்டரி மேல்நிலைப்பள்ளியில், அறிவியல் கண்காட்சி நடந்தது.தேசிய அறிவியல் தினத்தையொட்டி நடந்த அறிவியல் கண்காட்சிக்கு, பள்ளி முதல்வர் ராயல் டொமினிக் வரவேற்றார். பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சஜித் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கண்காட்சியை துவக்கி வைத்து அறிவியல் படைப்புகளை பார்வையிட்டார். பாகூர் சப் இன்ஸ்பெக்டர்கள் நந்தக்குமார், குமார் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். கண்காட்சியில், அறிவில், கணிதம், சுற்றுச்சூழல், சத்துணவு, வேளாண்மை, ஆரோக்கியம் மற்றும் வளம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. தேவையற்ற பிளாஸ்டிக், மரம் உள்ளிட்டவைகளின் கழிவுகள் மூலமாக பல்வேறு கலை மற்றும் அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை